Hospital for geriatric care launched in T Nagar
சென்னை- முதியோருக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் விதமாக, தி.நகரில், 'ஜெரிகேர்' மருத்துவமனை துவக்கப்பட்டு உள்ளது.நாட்டில், கொரோனா தொற்று தீவிரமடைந்திருந்த காலங்களில், முதியோருக்கான மருத்துவத்தின் மீதான, கவனிப்பில் குறைபாடுகள் இருந்தன.இதை சரி செய்யவும், 2025ல், நாட்டின் மக்கள் தொகையில், 15 சதவீதம் பேர், 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கக்கூடும் என்பதால், அவர்களுக்கு, மருத்துவ சேவைகள் வழங்க, சிறப்பு மருத்துவமனை ஒன்று உருவாக்க, முடிவு செய்யப்பட்டது.மூத்த மருத்துவர், வி.எஸ்.நடராஜன் வழிகாட்டுதல்படி, டாக்டர்கள் லட்சுமிபதி ரமேஷ் மற்றும் சீனிவாஸ் உள்ளிட்டோர் முதியோருக்கான, 'ஜெரிகேர்' மருத்துவமனையை உருவாக்கினர்.தி.நகரில் உள்ள, நாயர் சாலையில், 50 படுக்கை வசதிகளுடன், இம்மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, வயதானவர்களின் உடல்நலப் பிரச்னைகளை நிர்வகிக்க, நன்கு பயிற்சி பெற்ற, மருத்துவ ஊழியர்கள் உள்ளனர்.இம்மருத்துவமனையில், சிக்கலான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால், நோயாளிகள் சிகிச்சை பெற, மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம் குறைக்கப்படுவதுடன், அவர்களின், வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படுகிறது.மேலும், முதியவர்களுக்கான, 24 மணி நேர சிகிச்சையும், அவர்களுக்கான, அவசரகால ஆம்புலன்ஸ் சேவை, நோயாளிகளை வீட்டில் இருந்து கவனித்து கொள்ள, திறமை வாய்ந்த நர்சுகள் உட்பட, பல்வேறு மருத்துவ மேலாண்மையும், இந்த மருத்துவமனை வாயிலாக, நோயாளிகளுக்கு கிடைக்கின்றன.